Home One Line P2 ஆஸ்ட்ரோ : ‘அசுர வேட்டை’ கலைஞர்களுடன் சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ : ‘அசுர வேட்டை’ கலைஞர்களுடன் சிறப்பு நேர்காணல்

1202
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அண்மையக் காலமாக ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசை 231 விண்மீன் எச்டியில் ஒளிபரப்பாகி வரும் அசுர வேட்டை தொடர் பரவலான இரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

அந்தத் தொலைக்காட்சித் தொடரில் பங்கேற்ற கலைஞர்களுடனான அனுபவங்களை செல்லியல் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

எஸ்.டி புவனேந்திரன், இயக்குநர்:

  1. இந்தத் தொடரை இயக்குவதற்கான உங்களின் உத்வேகம் என்ன?

கதையின் சாரம்சமே தொடரை இயக்க என்னை தூண்டிய முக்கிய உத்வேகமாகும். சில பொதுவான கதாபாத்திரங்களுடன் இரண்டு வெவ்வேறு காலங்களில் இரண்டு வெவ்வேறு சித்தாந்தங்களை ஆராய முயற்சித்தேன். அது மிகவும் உற்சாகமானப் பகுதியாகும். அதுமட்டுமின்றி, இரசிகர்களுக்குச் சிறந்த விருந்தாக அமையும் கதை மற்றும் திரைக்கதையை உருவாக்க என்னை ஊக்கப்படுத்தியது, கதை சொல்லும் முறை.

  1. இத்தொடரை வெற்றிகரமாக இயக்கிய உங்களின் அனுபவம் பற்றி கூறுங்கள்?
#TamilSchoolmychoice

தொற்றுநோய்க்கு மத்தியில் தொடரை இயக்கிய அனுபவம் மிகவும் சவாலாக இருந்தது. மிகக் குறுகியக் காலத்தில் தொடரை இயக்கி முடிக்க வேண்டிய அவசியம் இருந்ததால், அது சவாலை மேலும் கடினமாக்கியது. ஆயினும்கூட, அனைத்து குழுவினருடன் சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதலின் மூலம், எல்லாவற்றையும் செவ்வெனச் செய்து முடிக்க முடிந்தது.

  1. இந்தத் தொடரில் இரசிகர்கள் எதை எதிர்பார்க்கலாம்?

ஒவ்வொரு அத்தியாயமும் இரசிகர்ளை இருக்கைகளின் விளிம்பில் விடும் சாத்தியம் கொண்டதால் இரசிகர்கள் ஓர் அற்புதமானக் குற்றவியல் த்ரில்லரை எதிர்ப்பார்க்கலாம். மேலும், இத்தயாரிப்பு தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய, இதயத்தைத் தூண்டும் குடும்பப் பண்புகளை உள்ளடக்கியுள்ளது.

ஹரிதாஸ் & சங்கீதா கிருஷ்ணசாமி, நடிகர்கள்:

  1. அசுர வேட்டை தொடரில் உங்களின் கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறுங்கள்?
ஆஸ்ட்ரோ – அசுரவேட்டை – நடிகர் ஹரிதாஸ்

ஹரிதாஸ்: எனது மோசமானக் கடந்தக் காலத்தைக் கொண்ட தடயவியல் புகைப்படக் கலைஞரான ‘சில்வா’ எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். தனது தாத்தாவிடமிருந்துப் பெற்ற ஒரு சிறந்தச் சக்தியின் மூலம், அவர் தனது புகைப்படக் கருவியின் வழி இறந்தவர்களைக் காண முடிகிறது. பயந்தாலும், அதன் பின்னணியில் உள்ளக் காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.

சங்கீதா: ‘அமீதா’ எனது கதாபாத்திரம் – குற்றவியல் விசாரணைப் பிரிவிற்குத் தலைமைத் தாங்கும் ஒரு காவல்துறை அதிகாரி. இதுப்போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது இதுவே எனது முதல் முறையாகும். தனது வேலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் குணம் கொண்டவர், அமீதா. சேவைச் செய்வதன் மூலமும் பாதுகாப்பாக இருப்பதன் மூலமும் தனது பொறுப்பை நிலைநிறுத்த அவர் முயற்சிப்பார். உண்மை விபரங்களை மட்டும் மையமாகக் கொண்டு செயல்படுவதால், மர்மம் மற்றும் மூடநம்பிக்கைகள் சூழ்ந்த ஒரு வழக்கில் பணியாற்றுவது சவாலாக இருந்தது.

  1. திரைப்படம் மற்றும் தொடரில் நடித்த அனுபவங்களை ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் யாவை?

ஹரிதாஸ்: ஒவ்வொரு அத்தியாயம் மற்றும் முழு தொடரும் இரண்டு விரிவானக் கதைகளைக் கொண்டது, ஒரு தொலைக்காட்சி நாடகத்தின் திரைக்கதை (ஸ்கிரிப்ட்). திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் ​​தொடர் விவரங்களை ஆழமாக அணுக அனுமதிக்கிறது. ஆயினும்கூட, ஒரு நடிகரின் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு, இரண்டு வகையானத் தயாரிப்புகளுக்கும் சமமானதே.

சங்கீதா கிருஷ்ணசாமி

சங்கீதா: தொற்றுநோய் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கை செயல்முறைகளைக் (SOP) கட்டாயமாகப் பின்பற்ற வேண்டியிருந்தது. ஒரு தொடரின் ஒளிப்பதிவு (shooting) நீண்ட நேரம் நடைபெறுவதால் நேரக் கட்டுப்பாடு ஏற்படுகிறது. இருப்பினும் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு ஒரு நாளைக்கு சில காட்சிகளை மட்டுமே மையமாகக் கொண்டது. ஒரு நடிகையாக, சுயமாக வரிகளைத் தயாரிப்பது, மனப்பாடம் செய்வது, புரிந்துக்கொள்வது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், படப்பிடிப்பு இடங்களில் திட்டமிடப்படாத மாற்றங்கள் மற்றும் பல காரணங்களினால் தொடரின் திரைக்கதை (ஸ்கிரிப்ட்) வழக்கமாக படப்பிடிப்பு முழுவதும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்கும்.

  1. இந்தத் தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

ஹரிதாஸ்: அசுர வேட்டை தொடர் ஒரு வித்தியாசமான உணர்வையும் வகையையும் கொண்டுள்ளதாலும், எங்களின் இரசிகர்களைக் கவரும் வண்ணம் புதிய மற்றும் தனித்துவமான ஒன்றை நாங்கள் முயற்சித்ததால் எல்லா வயதினராலும் இது ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

சங்கீதா: இத்தொடர் இரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். ஒரு குழுவாக, தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த குற்றவியல் திரில்லரை வெற்றிகரமாகக் கொண்டு வர நாங்கள் பல சவால்களை சந்தித்தோம். இரசிகர்களிடமிருந்து ஆக்கபூர்வமானக் கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம். எதிர்காலத்தில், அனைத்து மலேசியர்களையும் கவரும் ஒரு சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்க எங்களுக்கு உதவியாக இருக்கும்.