Home One Line P2 சீன தடுப்பூசிகளுக்கு பதிலாக, இந்திய தடுப்பூசிகளை வாங்கும் இலங்கை

சீன தடுப்பூசிகளுக்கு பதிலாக, இந்திய தடுப்பூசிகளை வாங்கும் இலங்கை

610
0
SHARE
Ad

கொழும்பு: இலங்கை இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசியை பெற விருப்பம் கொண்டுள்ளது.

முன்னதாக, சீனாவிடம் இருந்து தடுப்பூசிகளை இலங்கை வாங்கியுள்ளது. இந்தியாவிடம் இருந்தும் அது தடுப்பூசிகளை வாங்கியது.

ஆயினும், இப்போது, சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும், இந்தியாவிடம் இருந்து கூடுதலாக 1.35 கோடி தடுப்பூசிகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

சீனா மற்றும் ரஷ்ய தடுப்பூசிகள் இன்னும் தயாராகவில்லை என்றும், இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகளுக்கு அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் என்றும் அது தெரிவித்துள்ளது.