Home One Line P1 நாடாளுமன்ற அமர்வை நடத்த உத்தரவிடுமாறு தேமு மாமன்னரிடம் வேண்டுகோள்

நாடாளுமன்ற அமர்வை நடத்த உத்தரவிடுமாறு தேமு மாமன்னரிடம் வேண்டுகோள்

516
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு தேசிய முன்னணி மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 40 (2), அவசர கட்டளைச் சட்டத்தின் (தேவையான அதிகாரங்கள்) 2021 இன் பிரிவு 14 (1) (பி)- இன் கீழ் மாமன்னர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என்று சாஹிட் கூறினார்.

“தேசிய முன்னணி, பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களை நாடாளுமன்ற கூட்டத்தொடர் உடனடியாக நடத்த வேண்டும் என்ற மாமன்னரின் உத்தரவை மதிக்குமாறு பரிந்துரைக்கிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மனித உரிமைகள், பொது சமூகத்தின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக அவசரகால அறிவிப்பு மற்றும் அவசர கட்டளை (தேவையான அதிகாரங்கள் 2021) ஆகியவை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்க முடியும் என்று சாஹிட் கூறினார்.

இது தவிர, கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் செயல்திறனைப் பற்றியும், மக்களின், குறிப்பாக பி 40 குழுவின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக 2021 வரவு செலவுத் திட்டத்தை செயல்படுத்துவதன் செயல்திறனைப் பற்றியும் நாடாளுமன்றம் விவாதிக்க முடியும் என்றார்.