Home One Line P1 நாடாளுமன்ற அமர்வு: சாஹிட் ஹமிடி கூற்றை மறுத்த விக்னேஸ்வரன்

நாடாளுமன்ற அமர்வு: சாஹிட் ஹமிடி கூற்றை மறுத்த விக்னேஸ்வரன்

606
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணி, நாடாளுமன்ற அமர்வை உடனடியாக நடத்தக் கோரியதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நேற்று (வியாழக்கிழமை மார்ச் 4) குறிப்பிட்டதை மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மறுத்துள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற தேசிய முன்னணிக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினின் உத்தரவு குறித்து எந்த அனுமானமும் செய்யக்கூடாது என முடிவெடுத்ததாக அவர் கூறினார்.

“தேசிய முன்னணி தலைவரின் அறிக்கைக் கண்டு நான் அதிர்ச்சியடைகிறேன். நாடாளுமன்றத்தை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு மாமன்னருக்கு முறையிடும் எந்தவொரு முடிவையும் தேசிய முன்னணி கூட்டம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று, சாஹிட் ஹமிடி, மாமன்னருக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அம்னோ தலைவரின் அறிக்கை தவறானது என்று விக்னேஸ்வரன் கூறினார்.

“நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டிய விவகாரம் விவாதிக்கப்பட்டது. ஆனால், மாமன்னர் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு உடனடியாக உத்தரவிடவில்லை என்ற விளக்கங்கள் சிலர் கூறினர். மாறாக பிரதமரின் ஆலோசனையின் பேரில் மாமன்னர் பொருத்தமானதாகக் கருதும் ஒரு தேதியில் நாடாளுமன்றம் கூட்ட முடியும் என்றே மாமன்னர் அறிவித்ததாகக் கூறினர்.

“எனவே, எந்தவொரு அனுமானங்களையும் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தோம். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக எந்தவொரு அறிக்கையும் வெளியிட வேண்டிய அவசியமில்லை,” என்று அவர் கூறினார்.