Home One Line P1 ஜசெக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் இணைந்தனர்

ஜசெக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் இணைந்தனர்

820
0
SHARE
Ad

ஈப்போ: பேராக்கின் இரண்டு ஜசெக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் சேர்ந்துள்ளனர்.

தேசிய கூட்டணி மாநில அரசாங்கத்தை ஆதரித்ததற்காக ஜசெகவில் இருந்து வெளியேற்றப்பட்ட துரோனோ சட்டமன்ற உறுப்பினர் பவுல் யோங் மற்றும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இப்போது மொகிதி யாசின் கட்சியின் ஒரு பகுதியாக உள்ளனர்.

முன்னதாக, சிவசுப்பிரமணியம் கெராக்கானில் சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பிரதிநிதிகள் கட்சியில் சேர்ந்துள்ளதை பேராக் பெர்சாத்து செயலாளர் சைனோல் பாட்ஸி பஹாருடின் உறுதிப்படுத்தியதாக எப்எம்டி தெரிவித்தது. கடந்த டிசம்பரிலிருந்து பெர்சாத்துவில் அவர்கள் இணை உறுப்பினர்களாக இருப்பதாக அவர் கூறினார்.

யோங் துரோனோவில் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

சிவசுப்பிரமணியம் மூன்றாவது முறையாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.