Home One Line P2 ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் இரா.முத்தரசன்

ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் இரா.முத்தரசன்

924
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 6) இரவு 9.00 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் (அலைவரிசை எண் 201) ஒளியேறும் விழுதுகள் நிகழ்ச்சியில் செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் பங்கு பெறுகிறார்.

அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் நிகழ்ந்திருக்கும் அரசியல் மாற்றங்கள், உலகளாவிய வெளியுறவுக் கொள்கைகளில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள் ஆகியவை குறித்த விவகாரங்களை இன்றைய விழுதுகள் நிகழ்ச்சி கொண்டிருக்கும்.

அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராக இரா.முத்தரசன் கலந்து கொண்டு தனது கருத்துகளை வழங்குவார்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 8) காலையில் இடம்பெறும்.