Home One Line P2 எழுத்துருவியல் வடிவமைப்பு : முத்து நெடுமாறன் இயங்கலை வழி உரை

எழுத்துருவியல் வடிவமைப்பு : முத்து நெடுமாறன் இயங்கலை வழி உரை

747
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்தியாவின் டைப்போகிராபி சொசைட்டி (Typography Society of India) எனப்படும் எழுத்துருவியல் கழகத்தின் ஏற்பாட்டில், இயங்கலை வழியான உரையை மலேசியாவின் கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் வழங்கவிருக்கிறார்.

இந்திய எழுத்துருவியல் கழகம் “எழுத்துரு வடிவமைப்பு” தொடர்பில் இயங்கலை மூலம் தொடர் உரைகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் நாளை சனிக்கிழமை (மார்ச் 6) இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு (மலேசிய நேரம் இரவு 7.30 மணி) முத்து நெடுமாறன் தனது உரையை வழங்குகிறார். எழுத்துரு வடிவமைப்பு, எழுத்துரு தொழில்நுட்பம் (Font Design, Font Engineering and  Annai Multi-script typeface) ஆகிய அம்சங்களை முத்து நெடுமாறனின் உரை உள்ளடக்கியிருக்கும்.

முரசு குழுமத்தின் தலைவரும் கணினித் துறை நிபுணருமான முத்து நெடுமாறன் அனைத்துலக அளவில் கையடக்கக் கருவிகளில் மொழிகளுக்கான உள்ளீடுகளை வழங்கிய முன்னணி தொழில்நுட்ப நிபுணர் ஆவார். பல தெற்கு ஆசிய, தென்கிழக்காசிய மொழிகள் கையடக்கக் கருவிகளில் உள்ளீடு காண்பதற்கு அவர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

முத்து நெடுமாறனின் எழுத்துருவியல் தொடர்பான மேற்கண்ட உரையைக் கீழ்க்காணும் இணைய வழி இணைப்புகளில் காணலாம்: