Home One Line P2 ஆஸ்ட்ரோ & ராகா : மார்ச் 14 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ & ராகா : மார்ச் 14 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

611
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் எதிர்வரும் மார்ச் 14-ஆம் தேதிவரை ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

ஞாயிறு, 7 மார்ச்

கலர்ஸ் சன்டே கொண்டாட்டம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), மாலை 7 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

தொகுப்பாளர்கள்: அஞ்சனா ரங்கன் & கமல்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ‘இதயத்தை திருடாதே’, ‘உயிரே’, ‘சில்லுனு ஒரு காதல்’ மற்றும் ‘அம்மன்’ ஆகிய தொடர்களின் பிரபலங்களுக்கு இடையிலான நட்புரீதியான யுத்தங்களைச் சித்தரிக்கும் நிகழ்ச்சி. நடன நிகழ்ச்சிகள், வேடிக்கையான விளையாட்டுக்கள், மற்றும் பிரபலங்களின் சிறப்புப் படைப்புகளை உள்ளடக்கிய நிகழ்ச்சி.

திங்கள், 8 மார்ச்

சிவந்து போச்சி நெஞ்சே (புதிய அத்தியாயங்கள் – 6-10)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: கிருத்திகா நாயர், கர்ணன் ஜிகிராக், தேவராஜ், வித்யதர்ஷினி ருகுமங்கதன், புஷ்பா நாராயணன், ஷேபி, ரென்னி மார்ட்டின் & ஈஸ்வர் ஜி
யாஷ்வின் தனது புள்ளிகளை அதிகரிக்க அஞ்சனா திட்டத்தை வகுக்கிறார். டாக்டர் ஸ்ரீராம் உண்மையை நெருங்குகிறார்.

இருவர் (புதிய அத்தியாயங்கள் – 21-25)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

பைரவியின் உறவைப் பற்றி சோமு கண்டுபிடிக்கிறார். பைரவி மீண்டும் அமரனைச் சந்திப்பதைத் தடுக்கிறார்.

யார்? (புதிய அத்தியாயங்கள் – 16-20)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

மாலினியின் விளையாட்டு தீவிரமடைகிறது. மைதிலியை மனம் ரீதியாகக் காயப்படுத்தும் செயலில் மாலினி ஈடுபடுகிறார்.

அப்பளசாமி அபார்ட்மென்ட் (புதிய அத்தியாயங்கள் – 9-12)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), இரவு 8 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தொண்டு செய்யும் குணம் கொண்ட அப்பளசாமிக்குச் சொந்தமான ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் (அபார்ட்மென்ட்) வசிக்கும் ஒரு சமூகத்தைச் சித்தரிக்கின்றது, இத்தொடர். முன்னாள் தோட்டத் தொழிலாளியான அவர், மக்களை முன்னிருத்துவதோடு அதில் நம்பிக்கையும் கொண்டவர். அந்த அடுக்குமாடி குடியிருப்பு அவரது மகன் அரவிந்த்சாமிக்கும் சொந்தமானது. டைமன் பாபுவால் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு நாள், உள்ளூர் அதிகாரிகள், அப்பளசாமி அபார்ட்மென்டிற்கு எதிரான முறைகேடு மற்றும் புகார்களினால் சுற்றறிக்கை (summons) அனுப்புகின்றனர். அதிருப்தி அடைந்த அரவிந்த்சாமி, டைமன் பாபுவை பணியிலிருந்து நீக்கிவிட்டு, அதிகாரிகளின் அடுத்த நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக 6 மாதங்களுக்குள் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய மேலாளரான ரூபாவதியை நியமிக்கிறார். அப்பளசாமி அபார்ட்மென்டில் உள்ள சிக்கல்கள் எவ்வாறுத் தீர்க்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய தொடரைக் காண்க.

JFW விருதுகள் 2020 *சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), இரவு 10 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்தப் பெண்களைக் கௌரவிக்கும் ஒரு விருது நிகழ்ச்சி. அவர்களின் திறமை மற்றும் மில்லியன் கணக்கான இரசிகர்களின் இதயங்களை கவர்ந்ததற்காக அவர்களுக்கான முடிசூட்டு விழா.

36 வயதினிலே

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), இரவு 9 மணி

நடிகை: ஜோதிகா

ஒரு ஆணாதிக்கச் சமுதாயத்திலிருந்து ஆழ்ந்த முரண்பாடுகளைத் தாண்டி 36 வயதான ஒரு பெண் தான் இழந்த ஆளுமையை மீண்டும் அடைகிறார்.

வியாழன், 11 மார்ச்

மகா சிவராத்திரி (நேரலை)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)செய்து மகிழுங்கள்.

மில்லியன் கணக்கான மக்களை ஈர்க்கும் தியானம் மற்றும் புகழ்பெற்றக் கலைஞர்களின் அற்புதமான இசை நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி, ஈஷா யோகா மையத்தில் (Isha Yoga Center) இரவு முழுவதும் நடைபெறும் ஒரு திருவிழாவாகும். இந்தியா, கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்திலிருந்து மகா சிவராத்திரி கொண்டாட்டத்தின் நேரலை ஒளிபரப்பைக் கண்டு மகிழுங்கள்.

Chintu Ka Birthday (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: வினை பதக், தில்லோட்டாமா சோம், சீமா பவா & வேதாந்த் சிபர்

ஈராக் மீதான அமெரிக்கா படையெடுப்பின் போது, சில சட்டவிரோதக் குடியேறிகள் இந்தியாவுக்கு திரும்பி வரக் காத்திருந்தனர். அத்தகைய ஒரு குடும்பம் தங்கள் இளைய உறுப்பினர் சிந்துவின் 6-வது பிறந்தநாளைக் கொண்டாடத் தயாராகினர். மேலும் அவர்களின் கனிவான ஈராக்கிய நில உரிமையாளர் அவர்களுக்கு உதவினார்.

அருணாச்சலம்

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), இரவு 9 மணி

ஒரு கிராமத்தின் முக்கியப் பிரமுகரின் மகனான அருணாச்சலம் தனது கடந்தக் காலத்தைப் பற்றி அறிந்துக்கொள்கிறார். இருப்பினும், விதி அதன் விளையாட்டைக் கொண்டுள்ளது.

வெள்ளி, 12 மார்ச்

சியான்கள் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்: நளினிகாந்த்

நெருங்கிய நண்பர்களான ஏழு குறும்புக்கார மூத்தக் குடிமக்களின் கதை. சமூகம் எவ்வாறு தீர்ப்பளிக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறார்கள்.

சனி, 13 மார்ச்

Ab…Bas! (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: டயானா ஹேடன், ரோஹித் ராய் & ஷவர் அலி

கணவரின் கள்ளத் தொடர்பைப் பற்றிக் கேள்வி எழுப்பியதற்காக அவர் சௌமியாவைக் கொடுமைப்படுத்தவே, சௌமியா தனது மகளுடன் தப்பி ஓடுகிறார். இருப்பினும், அவர் குண்டர்கள் மற்றும் காவல்துறையின் உதவியுடன் அவளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.

குயின் (புதிய அத்தியாயம் – 4) *மலேசியாவில் பிரத்தியேகமாக ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, சனி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: ரம்யா கிருஷ்ணன், இந்திரஜித் சுகுமாறன், அஞ்சனா ஜெயபிரகாஷ், அனிகா சுரேந்திரன் & வம்சி கிருஷ்ணா

சூப்பர் ஸ்டார் ஜி.எம்.ஆரைச் சந்தித்தப்பின் சக்தியின் வாழ்க்கை மாறுகிறது. சக்தி சூப்பர் ஸ்டாராவதற்கானப் பயணம் தொடங்குகிறது.

ஞாயிறு, 14 மார்ச்

காலா சூராஜ் (Kaala Sooraj) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), பிற்பகல் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: சத்ருகன் சின்ஹா, சுலக்சனா பண்டிட் & ராகேஷ் ரோஷன்
கரன் ஒரு பாதாள உலக கும்பலின் இரக்கமற்ற தலைவர். இறுதியில், கடத்தல்காரரான மஜீத் மற்றும் கரனின் நண்பரான ரஞ்சீத் ஆகியோர் கரனை படுகொலைச் செய்ய கூலிப்படைகளில் சேர்கின்றனர்.

ரசிக்க ருசிக்க சீசன் 6 (புதிய அத்தியாயம் – 5)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தொகுப்பாளர்கள்: ஷேபி & பிரசாத்

ஷேபி மற்றும் பிரசாத் ‘ரசிக்க ருசிக்க’ சீசன் 6-ஐத் இனிதே தொடங்குகிறார்கள். இம்முறை உணவு விரும்பிகளைக் கவர்ந்திழுக்கும் மலிவான மற்றும் சுவையான உணவு வகைகளைத் தேடிச் செல்கின்றனர்.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

திங்கள், 8 மார்ச்

கலந்துரையாடல்: உங்கள் அம்மாவைத் தவிர உங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் பெண் யார்?

ராகா, காலை 7-8 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தங்களின் அம்மாவைத் தவிர தங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் பெண்ணைப் பற்றிய விவரங்களை இரசிகர்கள் பகிர்ந்துக் கொள்ளலாம்.

செவ்வாய், 9 மார்ச்

நேர்காணல்: பெண்கள் சந்திக்கும் பொதுவான சுகாதாரப் பிரச்சினைகள்

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விருந்தினர்: மகப்பேறு மருத்துவர், பாண்தாய் மருத்துவ மையம்

பெண்கள் சந்திக்கும் பொதுவான சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றைப் பகிர்ந்துக் கொள்ளும் மகப்பேறு மருத்துவரின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன் பெறலாம்.

புதன், 10 மார்ச்

நேர்காணல்: கராத்தே வீரர், ஷர்மிளாவின் வெற்றிக் கதை

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விருந்தினர்: ஷர்மிளா, கராத்தே வீரர்

தனது வெற்றிக் கதைகளைப் பகிர்ந்துக் கொள்ளும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கானக் கணித குறிப்பு புத்தகத்தை எழுதிய கராத்தே வீரர், ஷர்மிளாவின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன் பெறலாம்.

வியாழன், 11 மார்ச்

நேர்காணல்: மலேசிய மூத்த பாடகரான ஜெஸ்ஸியின் வெற்றிக் கதை

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விருந்தினர்: ஜெஸ்ஸி, மலேசிய மூத்த பாடகர்

புற்றுநோயுடன் போராடி வென்ற வெற்றிக் கதையைப் பகிர்ந்துக் கொள்ளும் மலேசிய மூத்த பாடகரான ஜெஸ்ஸியின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன் பெறலாம்.


* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள், அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை