Home One Line P1 “ஹாடி அவாங் மீது நீதிமன்ற அவமதிப்பு கொண்டுவரப்பட  வேண்டும்” – கோபால் ஸ்ரீராம் கோரிக்கை

“ஹாடி அவாங் மீது நீதிமன்ற அவமதிப்பு கொண்டுவரப்பட  வேண்டும்” – கோபால் ஸ்ரீராம் கோரிக்கை

537
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பாஸ் கட்சித் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படவேண்டும் என முன்னணி வழக்கறிஞரும் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் ஷாரியா சட்டம் தொடர்பான வழக்கொன்றை விசாரித்த கூட்டரசு நீதிமன்றம் சிலாங்கூர் மாநிலத்துக்கான 1995-ஆம் ஆண்டு ஷாரியா குற்றவியல் சட்டம் பிரிவு 28-ஐ செல்லாது எனத் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஹாடி அவாங் கடுமையாக விமர்சித்துத் தனது கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

அதில் நீதிமன்ற அவமதிப்புகள் இருக்கின்றன எனக் கூறிய ஸ்ரீராம், “மலேசியாகினி மீது நீதிமன்ற அவமதிப்பு கொண்டுவர முடியுமென்றால், அதே போன்ற கருத்துகளைத் தெரிவித்திருக்கும் ஹாடி அவாங் மீதும் நீதிமன்ற அவமதிப்பு கொண்டுவரப்பட வேண்டும். இரட்டைப் போக்கை அரசாங்கம் கடைப்பிடிக்கக் கூடாது” என ஸ்ரீராம் வலியுறுத்தி உள்ளார்.