Home One Line P2 காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

1058
0
SHARE
Ad

சென்னை : கடந்த சில நாட்களாக திமுக-காங்கிரஸ் இடையில் நீடித்து வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்து காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.

மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே, இந்தத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு அங்கு வசந்தகுமார் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலும் நடத்தப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக – காங்கிரஸ் நேரடியாக மோதுகின்றன. பாஜக வேட்பாளராக ஏற்கனவே பொன்.இராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice