Home One Line P1 மசீச, 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியோடு இணைந்திருக்கும்

மசீச, 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியோடு இணைந்திருக்கும்

904
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலிலும் மசீச தொடர்ந்து தேசிய முன்னணியோடு இணைந்திருந்து அந்தக் கூட்டணியை ஆதரிக்கும் என வீ கா சியோங் அறிவித்துள்ளார்.

மசீச தேசியத் தலைவரான வீ கா சியோங், “தேசிய முன்னணியை முதன் முதலில் உருவாக்கியது அம்னோ, மசீச, மஇகா ஆகிய மூன்று கட்சிகள்தான். எத்தனையோ பிரச்சனைகளையும் சவால்களையும், போராட்டங்களையும் நாங்கள் கடந்து வந்துள்ளோம். எனினும் தேசிய முன்னணி முன்னெடுத்த பல இனக் கலாச்சாரம், மிதவாதம், அனைவரையும் இணைத்துக் கொள்வது போன்ற அம்சங்களைத் தொடர்ந்து செயல்படுத்த மசீச பாடுபடும்” என்றும் கூறியிருக்கிறார்.