Home One Line P2 மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்

மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்

928
0
SHARE
Ad
வைகோ – ஸ்டாலின் (கோப்புப் படம்)

சென்னை : கடந்த சில நாட்களாக இழுபறியில் நீடித்து வந்த திமுக-மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீடு இன்று சனிக்கிழமை இரவுடன் முடிவுக்கு வந்தது.

திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் வைகோ தலைமையிலான மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கான உடன்பாட்டில் வைகோவும் ஸ்டாலினும் கையெழுத்திட்டனர்.

#TamilSchoolmychoice

மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் மதிமுக ஒப்புக் கொண்டுள்ளது.

இதற்கிடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 6 சட்டமன்றத் தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.

எனினும் மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளைப் பெற மறுத்து தொடர்ந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி எண்ணிக்கையும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. திமுக-காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு இன்னும் இழுபறி நிலையில் இருந்து வருகிறது.