Home One Line P2 ஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்

ஆஸ்ட்ரோ : “சிவந்து போச்சி நெஞ்சே” – உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடர்

827
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ‘சிவந்து போச்சி நெஞ்சே’ எனும் முதல் ஒளிபரப்புக் காணும் உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

மார்ச் 1 முதல் இந்தத் தொடர் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் ஒளிபரப்புக் காணும் “சிவந்து போச்சி நெஞ்சே” எனும் அற்புதமான உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடரை, மார்ச் 1 முதல் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் கண்டு மகிழலாம்.

#TamilSchoolmychoice

23-அத்தியாயங்களைக் கொண்டச் சுவாரசியமான இந்தத் தொடர், ஒரு திருமணத்தின் பலவீனத்தையும் ஏமாற்றத்தின் பாதிப்பையும் சித்தரிக்கின்றது. இத்தொடரில் திறன்மிக்க உள்ளூர் கலைஞர்களானக் கிருத்திகா நாயர், கர்ணன் ஜிகிராக், தேவராஜ், வித்யதர்ஷினி ருகுமங்கதன், புஷ்பா நாராயணன், ஷேபி, ரென்னி மார்ட்டின் மற்றும் ஈஸ்வர் ஜி ஆகியோர் நடித்துள்ளனர். சிவந்து போச்சி நெஞ்சே இயக்குநர் நவீன் சாம்ராத்தின் முதல் தொடராகும்.

இத்தொடர் லிங்கேஷ் மற்றும் அஞ்சனாவின் திருமண வாழ்க்கையை விவரிக்கின்றது. லிங்கேஷின் நடத்தை மற்றும் வாழ்க்கை நடைமுறையின் தேர்வுகள் திருமண வாழ்க்கையைப் பாதிக்கவே, அஞ்சனா தனக்கு நிகழ்ந்த துரோகத்தை எண்ணி மனச்சோர்வில் மூழ்கிறார். அவர் இறுதியில் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இணைகிறார். அங்கு யஷ்வின் எனும் இறுதி ஆண்டு மாணவனைச் சந்திக்கவே தனது தேவைகளுக்கு இணங்குமாறு  அம்மாணவனைக் கட்டாயப்படுத்துகிறார். யாழினியைக் காதலிக்கும் யஷ்வின் அஞ்சனாவின் நடத்தையால் பெரும் சங்கடத்திற்குள்ளாகிறான். மறுபுறம், லிங்கேஷ் தனது மனைவியின் நடத்தைக் குறித்து சந்தேகம் கொள்கிறார். அஞ்சனாவின் சிக்கலான வஞ்சக வலை அவிழ்க்கப்படத் தொடங்கவே அது அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது.

“சிவந்து போச்சி நெஞ்சே” தொடரின் புதிய அத்தியாயங்களை, ஒவ்வொரு நாளும் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) கண்டு களியுங்கள் அல்லது ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.