Home One Line P1 கூட்டணி கட்சிகளுக்கிடையே தாவும் உறுப்பினர்களை இனி ஏற்க முடியாது

கூட்டணி கட்சிகளுக்கிடையே தாவும் உறுப்பினர்களை இனி ஏற்க முடியாது

577
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம், தனது கூட்டணி கட்சிகள் மற்ற கூட்டணி கட்சி உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முடிவு செய்துள்ளதாக அமானா துணைத் தலைவர் சலாவுடின் அயோப் தெரிவித்தார்.

நம்பிக்கை கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு பிரதிநிதிகளால் வென்ற இடங்கள், கட்சித் தாவியிருந்தால், அவ்விடங்களில் முதலாக போட்டியிட்ட கட்சியே போட்டியிடும் என்ற முடிவும் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“சமீபத்திய தலைவர்கள் மன்றக் கூட்டத்தில், ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. நம்பிக்கை கூட்டணியில் நல்லிணக்கத்தையும் நட்பையும் பாதுகாப்பதற்காக, நம்பிக்கை கூட்டணி கட்சியின் உறுப்பினர்களை மற்றொரு கூட்டணி கட்சியில் சேர ஏற்றுக்கொள்ள முடியாது, ” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆறு மாதங்களில், அமானா கட்சியைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள் பி.கே.ஆரில் இணைந்துள்ளனர்.

அமானாவைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களி, ஜோகூரில் தலா மூன்று பேரும், சிலாங்கூரில் இரண்டு பேரும் கட்சித் தாவியுள்ளனர்.

இதற்கிடையில், 15-வது பொதுத் தேர்தலில் அதிக நாடாளுமன்ற மற்றும் மாநில தொகுதிகளில் போட்டியிட அமானா விரும்புவதாக திஎம்ஐ செய்தித்தளம் கூறியுள்ளதாக மலேசியாகினி கூறியது.

“14-வது பொதுத் தேர்தலில், நாங்கள் 27 தொகுதிகளில் போட்டியிட்டோம், சட்டமன்றங்களிலும். இதில் அதிகரிப்பதை உறுதி செய்வோம். போட்டியிடும் இடங்களை வெல்ல முடியும் என்பதை உறுதி செய்வோம். கடந்த முறை நாடாளுமன்றத்தில் பதினொரு (இடங்களை) வென்றோம். இந்த முறை அதை விட அதிகமாக வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.