Home One Line P1 திரெங்கானுவில் அம்னோ போட்டியிடும் இடங்களில் பெர்சாத்து களம் இறங்கும்

திரெங்கானுவில் அம்னோ போட்டியிடும் இடங்களில் பெர்சாத்து களம் இறங்கும்

579
0
SHARE
Ad

கோலா திரெங்கானு: திரெங்கானுவில் அம்னோ போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும், தமது வேட்பாளர்களை களமிறக்க பெர்சாத்து தயாராக இருப்பதாக அதன் தலைவர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.

“நாங்கள் (பெர்சாத்து) வேட்பாளர்களை அனுமதிக்க பாஸ் தலைமை மற்றும் மந்திரி பெசார் (டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார்) ஆகியோருடன் கலந்துரையாடுவோம். அம்னோ எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அங்கு நாங்கள் போட்டியிடுவோம்,” என்று அவர் இன்று உத்துசான் இணையதளத்தில் கூறியுள்ளார்.

15-வது பொதுத் தேர்தலில், 32 மாநில சட்டமன்ற இடங்களிலும், எட்டு நாடாளுமன்ற இடங்களிலும் அம்னோ திரெங்கானுவில் போட்டியிட விரும்புவதாக கூறியதை அடுத்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

#TamilSchoolmychoice

அடுத்த பொதுத் தேர்தலில் இரு கட்சிகளுக்கிடையேயான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அம்னோவின் முடிவை பெர்சாத்து திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

“எந்த பிரச்சனையும் இல்லை, ஏனெனில் அரசியல்வாதிகளாக, தேர்தல்களில் பணியாற்ற வேண்டும், ” என்று அவர் விளக்கினார்.

எவ்வாறாயினும், பெர்லிஸ் மற்றும் சபா அம்னோ சமீபத்தில் பெர்சாத்துவிற்கு ஆதரவாகப் பேசின, மேலும் தேசிய கூட்டணியில் ஒத்துழைப்பைத் தொடர வேண்டும் என்று கூறின.