கோலாலம்பூர்: நீதிமன்ற வழக்குகளில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் சாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்டிருப்பதால் அம்னோ தலைவர் பதவிக்கு கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசானை மஇகா மற்றும் மசீச குறி வைப்பதாக வட்டாரம் தெரிவித்ததாக எப்எம்டி குறிப்பிட்டுள்ளது.
“மஇகா மற்றும் மசீச உறுப்பினர்கள் முகமட் ஹசானை அடுத்த வியூகமாகக் கொண்டுள்ளனர், “என்று வட்டாரம் கூறியதாக அச்செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குகளில் சாஹிட் சிக்கிவிடக்கூடும் என்ற அச்சங்கள் உள்ளன என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
மசீச மற்றும் மஇகா இரண்டும் இரண்டு விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று நம்புகின்றன . முதலாவது 15-வது பொதுத் தேர்தலின் போது தேசிய முன்னணி கொடிகளைப் பயன்படுத்துவத. இரண்டாவதாக, இரு கட்சிகளுக்கும் நியாயமான இடங்களை ஒதுக்கீடு செய்வது.
சாஹிட் இல்லை என்றால், அதற்கு அடுத்த நிலையில் சிறந்த நபராக முகமட ஹசான் இருக்கலாம். அவர் மலாய்க்காரர் அல்லாதவர்களால் விரும்பப்படுகிறார்.
“அவர் வணிக ஆர்வலராகவும் பொருளாதாரத்தில் முதிர்ச்சி உள்ளவராகவும் இருக்கிறார். மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் அவருடன் எந்த பிரச்சனையும் இல்லை, ” என்று வட்டாரம் மேலும் கூறியது.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அம்னோவிற்கும் பெர்சாத்துவிற்கும் இடையிலான உறவு பிளவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது. 15-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் அம்னோ கட்சியுடன் ஒத்துழைக்காது என்று சாஹிட் அண்மையில், பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.