சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கயிருக்கும் நிலையில், முக்கியக் கட்சிகள் கூட்டணிகளை உருவாக்கி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
அவ்வகையில், திமுக கூட்டணியில் இன்று புதன்கிழமை (மார்ச் 10) பார்வர்டு பிளாக் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
முன்னதாக, திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் ( 3), மனிதநேய மக்கள் கட்சி (2), விசிக (6), காங்கிரஸ் (25), சிபிஎம் (6), சிபிஐ (6) தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இவற்றில், மதிமுக (6), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), மக்கள் விடுதலை கட்சி (1) , தமிழக வாழ்வுரிமை கட்சி (1), ஆதி தமிழர் பேரவை (1) ஆகியவை தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இதனால், திமுக மொத்தமாக 174 இடங்களில் போட்டியிடும் என்று கூறப்பட்டது, ஆயினும் இப்போது 173 தொகுதிகளில் அது போட்டியிடும். மொத்தம் 187 இடங்களில் உதய சூரியன் சின்னத்தில் இந்த கூட்டணி களமிறங்குகிறது.