Home One Line P1 அம்னோ மலாய்க்காரர்கள் ஒற்றுமையை தொடர்ந்து பேணும்

அம்னோ மலாய்க்காரர்கள் ஒற்றுமையை தொடர்ந்து பேணும்

589
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணையக்கூடாது என்ற அம்னோவின் உறுதியான நிலைப்பாடு, மலாய் ஒற்றுமையை கட்சி ஒதுக்கி வைத்தது என்று அர்த்தமல்ல என்று முகமட் காலிட் நோர்டின் கூறினார்.

நாட்டில் உம்மாவை ஒன்றிணைக்கும் முயற்சி, அம்னோ கட்சியால் முன்னெடுக்கப்பட்டது என்று அம்னோ உதவித் தலைவரான அவர்  வலியுறுத்தினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய கூட்டணியை ஆதரிக்க வேண்டாம் என்ற தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு பல அழைப்புகள் இருந்தபோதிலும், அம்னோவுக்கு அதன் சொந்த அரசியல் கணக்கீடுகள் உள்ளன என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஒரு காலத்தில் சமூகத்தின் நலன்களை அம்னோ ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. அம்னோ மலாய் ஒற்றுமையை உறுதியாகக் கடைப்பிடித்ததால், செமாங்காட் 46-ஐ அம்னோ திரும்பப் பெற்றது. பாஸ் கட்சியுடன் இணைந்தது. அதனால் முவாபாக்காட் நேஷனல் உருவானது,” என்று அவர் இன்று முகநூல் பதிவில் தெரிவித்தார்.

முன்னதாக, அம்னோ உச்சமன்றக் குழு பெர்சாத்துவுடன் 15- வது பொதுத் தேர்தலில் ஒத்துழைக்காது என்று முடிவு செய்திருந்தது.

“அம்னோவின் நிலைப்பாடு அதன் அடிமட்ட ஆதரவாளர்களின் நிலைப்பாட்டில் வேரூன்றியுள்ளது என்பதை பலர் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. அம்னோ பெரும்பான்மையினரின் கட்சி. நாங்கள் மக்கள் ஆணைக்கு துரோகம் செய்யும் நபர்களால் உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. இது அம்னோ, அடிமட்ட மக்களின் விருப்பங்களுக்கு செவிசாய்த்ததால், அது தேசிய முன்னணியாக போட்டியிடும்,” என்று அவர் கூறினார்.