Home One Line P1 செராஸ் தடுப்புக் காவலில் ஏற்பட்ட மரணத்திற்கு விசாரணை கோரப்படுகிறது

செராஸ் தடுப்புக் காவலில் ஏற்பட்ட மரணத்திற்கு விசாரணை கோரப்படுகிறது

701
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மனித உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட மற்றொரு மரணம் குறித்து கவலையை எழுப்பியுள்ளது. இம்முறை செராஸ் மாவட்ட காவல் துறை தலைமையக தடுப்பில் இது நிகழ்ந்துள்ளது.

இறப்பை உறுதிப்படுத்திய செராஸ் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் முகமட் மொக்ஸைன் முகமட் சோன், இறந்தவர் தனியாக பூட்டப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இந்த வழக்கை “திடீர் மரணம்” என்று காவல் துறை வகைப்படுத்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

மரணம் மற்றும் துஷ்பிரயோகத்தை அகற்றுதல் அமைப்பு (எடிக்ட்) , இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இன்று ஓர் அறிக்கையில் கூறியது.

“தடுப்புக் காவலில் இறப்புக்கள் அதிகரித்து வருவதைப் பற்றி எடிக்ட் கவலை கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் தடுப்புக் காவலில் இருந்த போது தூக்கிட்டுக் கொண்டார் என்று காவல் துறை கூறியது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என்று அது கூறியது.

இதற்கிடையில், ஒரு தனி அறிக்கையில், முகமட் மொக்ஸைன், 54 வயதுடைய நபர் திங்கட்கிழமை (மார்ச் 8) மதியம் 12.30 மணியளவில் தடுப்புக் காவலில் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறினார்.