பெய்ஜிங்: உலகளாவிய பயணத்தை எளிதாக்கும் வகையில் சீனா அனைத்துலக தடுப்பூசி சுகாதார சான்றிதழை வெளியிட்டுள்ளது. இது விரைவில் மற்ற நாடுகளால் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பயணியின் கொவிட் -19 தடுப்பூசி பற்றிய விவரங்களையும், பரிசோதனை முடிவுகளையும் காட்டும் தடுப்பூசி கடப்பிதழை வழங்கிய உலகில் முதன்மையானது நாடாக சீனா திகழ்கிறது.
வெளியுறவு அமைச்சர் வாங் யி தனது வருடாந்திர பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், இந்த முயற்சியை அறிவித்த ஒரு நாள் கழித்து, திங்களன்று (மார்ச் 8) சீன குடிமக்கள் சான்றிதழைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இது உலக பொருளாதார மீட்சியை மேம்படுத்தவும், எல்லை தாண்டிய பயணத்தை எளிதாக்கவும் உதவும் என்று வெளியுறவு அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
“தொற்றுநோய் இன்னும் நம்மிடம் உள்ளது. ஆனால், உலகப் பொருளாதாரம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்,” என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறினார்.