Home One Line P2 நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

816
0
SHARE
Ad

சென்னை: 80- 90 ஆண்டுகளில் நகைச்சுவைக்காக தனக்கென்ற ஓர் இரசிகர்கள் பட்டாளமே சேர்த்து வைத்திருந்த நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்துள்ளார். திரைத்துறையை மட்டுமல்லாது, செந்தில் அவ்வப்போது அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த செந்தில், அவரது மறைவை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக கழகத்தின் அமைப்பு செயலாளராக டிடிவி தினகரன் செந்திலை நியமித்தார். அதன் பிறகு, அக்கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.