Home One Line P2 எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்

592
0
SHARE
Ad

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏழாவது முறையாக எடப்பாடியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இங்கு பழனிசாமி ஏழாவது முறையாகப் போட்டியிடுகிறார்.

முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார்.

இதனிடையே, இன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹசான் மற்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோரும் தங்கள் வேட்புமனுக்களை சமர்ப்பிப்பர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கு போட்டியாக நிற்கும் பாஜக வானதி சீனிவாசன் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.