யாங்கோன்: பிப்ரவரி ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் மோசமான போராட்டங்களைத் தொடர்ந்து மியான்மார் இராணுவம் மேலும் சில மாவட்டங்களில் இராணுவச் சட்டத்தை விதித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை யாங்கோன் நகரில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆங் சான் சூகியை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த வன்முறை நிகழ்ந்தது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவரது ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் மகத்தான வெற்றியைக் கண்ட தேசிய ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் தலைவர் சூகியை விடுதலை செய்ய ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர். பிப்ரவரி 1-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர், என்.எல்.டி தலைமையின் பெரும்பாலான தலைவர்களை இராணுவம் தடுத்து வைத்தது. வாக்காளர் மோசடி நடந்ததாக அது குற்றம் சாட்டியது, ஆயினும் எந்த ஆதாரமும் இன்னும் வழங்கப்படவில்லை.
இதுவரையிலும், 120- க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இந்த ஒடுக்குமுறையின் போது கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.