கோலாலம்பூர்: முஸ்லிம் அல்லாதவர்களிடையே அல்லாஹ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கான உரிமை தொடர்பான சர்ச்சை இப்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு குறித்து அரசுத் தலைமை வழக்கறிஞர் அப்துல் ரசாக் மூசா மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.
அப்துல் ரசாக், உள்துறை அமைச்சு மற்றும் மலேசிய அரசாங்கத்தின் சார்பாக செயல்படும் மூத்த வழக்கறிஞர் ஆவார்.
மார்ச் 10-ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி நார் பீ அரிபின் தீர்ப்பை எதிர்த்து முறையிட வேண்டும் என்று மலாய் அரசு சாரா அமைப்புகளும் அழுத்தம் கொடுத்ததால் இந்த மேல்முறையீடு செய்யப்பட்டது.
1986- ஆம் ஆண்டில் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் அல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்த அரசாங்கத்தின் உத்தரவு செல்லாது என்று நோர் பீ தனது தீர்ப்பில் கூறினார்.
ஜில் அயர்லாந்து என்ற கிறிஸ்தவ மெலனாவ் பெண்ணின் சட்ட நடவடிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் இந்த முடிவை எடுத்தார். தனது தீர்ப்பில் நோ பீ, சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ பெண்ணுக்கு “அல்லாஹ்” என்ற வார்த்தையை மத மற்றும் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்த உரிமை உண்டு என்று கூறினார்.