இத்தகைய இந்திய இளைஞர்களுக்கு சரியான முறையில் சினிமா தொடர்பான கற்றலை வழங்க தேசியத் திரைப்பட நிறுவனமான பினாஸ் (FINAS) முன்வந்திருக்கிறது.
குறிப்பாக தமிழ்ப் படங்களுக்கும், தொலைக்காட்சித் தொடர்களுக்கும் கதை-திரைக்கதையை எவ்வாறு அமைப்பது என்பதற்கான பயிற்சிகளை ஆர்வமுள்ளவர்களுக்கு தமிழிலேயே பினாஸ் வழங்கவிருக்கிறது.
இயங்கலை வழி நடத்தப்படும் இந்தத் திரைக்கதைக்கான பயிற்சி எதிர்வரும் 3 ஏப்ரல் 2021 தொடங்கி 5 நாட்களுக்கு இலவசமாக நடத்தப்படுகிறது.
இந்தப் பயிற்சியில் 20 பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். எனவே, இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் உடனடியாக தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தகுதியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பங்களை என்ற swftf2021@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விவரங்களோடு சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் 25 மார்ச் 2021 ஆகும்.