Home One Line P2 சீனத் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 2 நாட்களில் இம்ரான் கானுக்கு கொரொனா

சீனத் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 2 நாட்களில் இம்ரான் கானுக்கு கொரொனா

864
0
SHARE
Ad

இஸ்லாமாபாத் : கொவிட்-19 தொடர்பான தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டாலும் மீண்டும் அந்தத் தொற்று தாக்கும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (படம்) சீனாவின் தயாரிப்பான சீனோபார்ம் (Sinopharm) என்ற தடுப்பூசியின் முதல் அளவையை (டோஸ்) சுமார் 3 நாட்களுக்கு முன்னர்தான் (வியாழக்கிழமை மார்ச் 18) எடுத்துக் கொண்டார். எனினும் அவருக்கு சனிக்கிழமையன்று (மார் 20) கொவிட்-19 தொற்று கண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தடுப்பூசி எடுத்துக் கொண்ட 2 நாட்களிலேயே இம்ரான் கானுக்கு கொவிட்-19 தொற்று பாதித்திருப்பது மருத்துவ வட்டாரங்களிலும் அதிர்ச்சி அளித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இம்ரான் கானுக்கு இன்னும் முழுமையாக தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படவில்லை என பாகிஸ்தானின் சுகாதார அமைச்சு தற்காத்து அறிவித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எனினும் அவரின் உடல் நலம் தற்போது சீராக இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி சீனா 500,000 சீனோபார்ம் தடுப்பூசி அளவைகளை பாகிஸ்தானுக்கு வழங்கியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியது.

அந்தத் தடுப்பூசியைத்தான் இம்ரான் கான் கடந்த மார்ச் 18-ஆம் தேதி செலுத்திக் கொண்டார்.