Home One Line P1 தம்பி விவகாரம்: டிபிபி வருத்தப்படவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை!

தம்பி விவகாரம்: டிபிபி வருத்தப்படவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை!

799
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: டேவான் பகாசா மலாய் அகராதியில் “கெலிங்” என்ற வார்த்தைக்கு, டிபிபி, மன்னிப்பு கேட்கவோ அல்லது வருத்தப்படவோ இல்லை என்று ஜசெக தலைவர் பி.இராமசாமி விமர்சித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் இந்தச் சொல் சமூகத்தைப் புண்படுத்தும் தன்மையைக் கொண்டது.

டிபிபியின் இயங்கலை அகராதியில் இந்த சொல்லுக்கான அர்த்தம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

“இந்திய சமூகத்தை புண்படுத்தியதற்காக மன்னிப்பு அல்லது வருத்தப்படுவதற்கு பதிலாக, அகராதியை புதுப்பிப்பதாக டிபிபி வெறுமனே கூறியது. புதுப்பிப்பு என்பது தவற்றை ஒப்புக் கொண்டதற்கோ அல்லது மன்னிப்பு கேட்பதாகவும் இருக்காது. டிபிபியின் வருத்தமும் பொறுப்பும் எங்கே?,” அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.