Home One Line P2 62 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையான ஓவியம்

62 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையான ஓவியம்

592
0
SHARE
Ad

துபாய் : பொதுவாக பழமையான ஓவியங்கள் மில்லியன் கணக்கான டாலர்கள் விலையில் ஏலத்தில் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால் வாழும் ஓவியர்களின் ஓவியங்கள் அந்த அளவுக்கு விலை கொடுத்து வாங்கப்படுவதில்லை.

எனினும் வாழும் ஓவியர் ஒருவரின் ஓவியம் 62 மில்லியன் டாலர்களுக்கு, துபாயில் ஏலத்தில் விற்பனையாகி சாதனை புரிந்துள்ளது.

பொதுவாக வாழும் ஓவியர்களின் ஓவியங்கள் இந்த அளவுக்கு விற்பனையானதில்லை எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

கான்வாஸ் எனப்படும் விரிப்பில் வரையப்பட்ட இந்த ஓவியம் உலகிலேயே மிகப் பெரிய கான்வாஸ் ஓவியம் என்ற சாதனையையும் புரிந்துள்ளது.

17 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்த ஓவியம் வரையப்பட்டது. “மனித இனத்தின் பயணம்” (The Journey of Humanity) என்ற தலைப்பில் வரையப்பட்டிருக்கும் இந்த ஓவியம் நான்கு கூடைப்பந்து விளையாட்டு மைதான அளவைக் கொண்டதாகும்.

பிரிட்டனைச் சேர்ந்த சச்சா ஜாப்ரி இந்த ஓவியத்தைப் படைத்துள்ளார். கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக இந்த ஓவியத்தை வரைந்து விற்பனை செய்யும் முயற்சியில் சச்சா ஜாப்ரி ஈடுபட்டிருந்தார்.

இந்த பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்து அதனை 70 பாகங்களாகப் பிரித்து அவை அனைத்தையும் மொத்தம் 30 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தார் ஓவியரான சச்சா ஜாப்ரி.

ஆனால், கடந்த திங்கட்கிழமையன்று இந்த ஓவியத்தை விற்பதற்கான ஏலத்தில் ஒரே ஒரு வணிகர் அண்ட்ரி அப்டோன் அதை விட இருமடங்கு விலை கொடுத்து அந்த 70 பாக ஓவியங்கள் அனைத்தையும் 62 மில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கிறார்.

இதற்கு முன்னர் இந்த மாத தொடக்கத்தில் இதே போன்றதொரு ஓவியம் 69 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.

எனவே, வாழும் ஓவியர்களின் வரிசையில் சச்சா ஜாப்ரி மிக அதிகமான விலையில் விற்பனை செய்யபட்ட ஓவியத்தை வரைந்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.