Home One Line P2 சபரீசன், செந்தில் பாலாஜி இல்லங்கள் உள்ளிட்ட 28 இடங்களில் வருமானவரி சோதனை

சபரீசன், செந்தில் பாலாஜி இல்லங்கள் உள்ளிட்ட 28 இடங்களில் வருமானவரி சோதனை

1034
0
SHARE
Ad

சென்னை : திமுக தலைவர்கள் சிலரின் வீட்டிலும், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை அவரின் கணவர் சபரீசன் இல்லம் உள்ளிட்ட, 28 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

சபரீசனின் இல்லத்தில் இருந்துதான் திமுகவின் வியூக நிறுவனமான பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் செயல்பட்டு வருவதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

#TamilSchoolmychoice

சபரீசன் திமுகவின் முக்கிய அதிகார மையமாக உருவெடுத்திருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபரீசன் நண்பர் ஒருவரின் இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கின்றனர்.

எனினும், சபரீசன் வீட்டில் 136,000 ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டதாகவும் அந்தப் பணத்தையும் இரசீது போட்டு வருமான வரி அதிகாரிகள் திருப்பித் தந்து விட்டனர் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகன் அவரது மகனும் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் கார்த்தி மோகன் வீட்டிலும் வருமானவரி சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

கரூரில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி வீட்டிலும் அவரது சகோதரர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

குறிப்பாக திமுக தலைவர்கள் இல்லங்களில் மட்டும் வருமான வரி சோதனைகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகளை திமுக தலைவர்கள் முன்வைத்தனர்.

இதற்கிடையில் அதிமுக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.