Home One Line P1 ‘ராப் போர்க்களம் சீசன் 2’ – மெய்நிகர் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளலாம்

‘ராப் போர்க்களம் சீசன் 2’ – மெய்நிகர் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளலாம்

1374
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆர்வமுள்ள மலேசிய ராப்பர்கள் ‘ராப் போர்க்கலம் சீசன் 2’-இன் மெய்நிகர் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

‘ராப் போர்க்களம் சீசன் 2’-ஐப் பற்றினச் சில விவரங்கள்:

• ஆர்வமுள்ள மலேசிய ராப்பர்கள், மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியான ‘ராப் போர்க்கலம் சீசன் 2’-இன் மெய்நிகர் நேர்முகத்தேர்வில், இப்போது முதல் 2021 ஏப்ரல் 16 வரை, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் வாயிலாகக் கலந்துக் கொள்ளலாம்.

• மெய்நிகர் நேர்முகத்தேர்வில் போட்டியாளர்கள் கலந்துக் கொள்ளக் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

#TamilSchoolmychoice

– ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

– கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்திச் செய்துத் தேவையான அடையாளத்தைச் சமர்ப்பியுங்கள்.

– போட்டியாளர்கள் தமிழில் ராப் செய்யும் 1 நிமிட அசல் காணொலியைப் பதிவேற்றம் செய்யுங்கள்.

– 20 திறமையாளர்கள் நேர்முகத்தேர்வில் அடையாளம் காணப்பட்டு, பின்னர் பல நீக்கங்களை உள்ளடக்கியிருக்கும் தீவிர ராப் யுத்த சுற்றுகளுக்கு உட்படுத்தப்படுவர்.

– பிரபல உள்ளூர் ராப்பரான எம்ஸி ஜெஸ், ‘ராப் போர்க்கலம் சீசன் 2’-ஐத் தொகுத்து வழங்குவார். மேலும், எண்ணிலடங்கா உள்ளூர் மற்றும் அனைத்துலக விருதுகளை வென்ற தமிழ் ராப் உள்ளூர் நட்சத்திரமான, யோகி பி மற்றும் பிரபல உள்ளூர் இசையமைப்பாளரான நவீன் நேவிகேட்டர், இருவரும் நீதிபதிகளாகப் பணியாற்றுவர்.

• உள்ளூர் ராப்பர்களான, செயிண்ட் டிஎஃப்சி மற்றும் ஷீசே, இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்குப் போட்டியின் போது பயிற்சி வழங்குவதோடு வழிக்காட்டுவர்.

• ‘ராப் போர்க்களம் சீசன் 2’-இன் முதல் நிலை வெற்றியாளர் சுமார் 20,000 ரிங்கிட் மதிப்புடைய ரொக்கப் பரிசை தட்டிச் செல்வர்.

• மேல் விவரங்களுக்கு, astroulagam.com.my/RapPorkalamS2 எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.