Home One Line P2 நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார்!

நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார்!

710
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு தமிழகம் முழுவது நடைபெற்று வருகிறது.

காலையிலிருந்து முக்கியப் பிரபலங்கள் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்குகளை பதிவிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்ற விஜய்க்கு இரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்தனர். அவரை இரசிகர்கள் சூழ்ந்துள்ள காணொலி காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.

#TamilSchoolmychoice

முன்னதாக, சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் ரஜினி வாக்களித்த நிலையில், தி.நகர் வாக்குச்சாவடியில் சிவகுமார், கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா வாக்களித்தனர்.

திருவான்மியூரில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது இரு மகள்களுடன் வந்து வாக்களித்தார்.