Home One Line P2 எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார்

எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார்

557
0
SHARE
Ad

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது பேரனுடன் சென்று இன்று வாக்களித்தார்.

தமிழக சட்டமன்றத்துக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கொவிட்-19 தொற்றுக்கிடையில், பொது மக்கள் பாதுகாப்பைக் கருதி தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

வாக்குச்சாவடிகளுக்கு வரும் நபர்களுக்கு முதலில் கைத்தூய்மி கொடுக்கப்பட்டு கையுறையும் வழங்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

காலையிலிருந்து, திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.

தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் குடும்பத்துடன் வந்து முதல்வர் பழனிசாமி வாக்களித்தார். அவர் தனது பேரனை அழைத்து சென்று வாக்களித்தார். அனைவரும் ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.