Home One Line P1 தேசிய கூட்டணியில் ஆதிக்க கலாசாரத்தை நிராகரிக்க வேண்டும்!

தேசிய கூட்டணியில் ஆதிக்க கலாசாரத்தை நிராகரிக்க வேண்டும்!

473
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி இளைஞர் பிரிவு அரசியல் ஆதிக்க கலாச்சாரத்தை நிராகரிக்கின்றனர்.

இது ஒற்றுமையின்மையை விதைத்து, இலஞ்சம், ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் ஆகியவற்றில் ஈடுபடும் தலைவர்களை உருவாக்குகிறது என்று அதன் தகவல் தொடர்புத் தலைவர் முகமட் ஹில்மான் இடாம் கூறினார்.

இது அரசியலில் நல்ல மதிப்புகளை உட்பொதிப்பதன் மூலம் ஜனநாயகத்தை சுத்தம் செய்வதற்கான தேசிய கூட்டணியின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப உள்ளது என்றார்.

#TamilSchoolmychoice

“நாட்டின் ஏழு தசாப்த கால ஜனநாயகம் குறித்து நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

தேசிய கூட்டணி கீழ் ஒன்றிணைந்து ஒன்றாக இருக்க வேண்டும் என்ற பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் அழைப்பையும் தேசிய கூட்டணி வரவேற்கிறது என்றார்.

அதே நேரத்தில், பிரதமர் மொகிதின் யாசின் மற்றும் தேசிய கூட்டணி அரசின் தலைமைக்கு ஆதரவளிப்பதில் கபுங்கான் பார்ட்டி சரவாக் மற்றும் மஇகா நிலைப்பாட்டையும் இளைஞர் பிரிவு வரவேற்கிறது.