Home One Line P1 நஜிப்புக்கு ‘திவால் அறிவிப்பு’ கடிதம்!

நஜிப்புக்கு ‘திவால் அறிவிப்பு’ கடிதம்!

1009
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருமான வரி வாரியத்திடமிருந்து (ஐஆர்பி) முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ‘திவால் அறிவிப்பு’ கடிதத்தைப் பெற்றுள்ளார்.

இது நஜிப்பிடமிருந்து வருமான வரி வாரியம் 1.7 பில்லியன் ரிங்கிட் வரியைக் கோருவது தொடர்பானதாகும்.

ஐஆர்பி அதிகாரிகள் திங்கட்கிழமை (ஏப்ரல் 5) நஜிப்பின் இல்லத்திற்கு சென்று நேரடியாக அவரிடம் இந்தக் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஜூன் 2019-இல், பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜிப்பிடமிருந்து 1.69 பில்லியனுக்கும் அதிகமான தொகையை கோருவதற்காக ஐஆர்பி மூலம் அரசாங்கம் நஜிப் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தது.

மதிப்பீட்டு அறிவிப்பு வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள், நஜிப் 2011 முதல் 2017 வரையிலான வருமான வரி செலுத்த தவறியதாக அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கடனின் அளவு 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்தக் கடிதம் பெற்றதை நஜிப் தமது முகநூல் பக்கம் மூலமாக ஒரு நீண்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற நடவடிக்கைகள் அவரது அரசியல் வாழ்க்கையை அழிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.