Home One Line P2 தமிழ் நாட்டில் 71.79 % வாக்குப் பதிவு

தமிழ் நாட்டில் 71.79 % வாக்குப் பதிவு

832
0
SHARE
Ad

சென்னை : இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவில் 71.79 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்ட தமிழ் நாடு தேர்தல் ஆணையத் தலைவர் சத்யபிரசாத் சாகு, மாலை 7.00 மணி வரையிலான வாக்குப் பதிவுகளின் அடிப்படையில் தொலைபேசித் தொடர்புகளின் மூலம் பெறப்பட்ட புள்ளிவிவரம் இது என்றும், இறுதியான புள்ளி விவரங்கள் இதைவிடச் சற்றுக் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

கொரொனா தொற்று கண்டவர்களும் விரும்பினால் மாலை 6.00 மணி முதல் 7.00 மணிவரை வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதற்காக முழுக் கவச உடை அணிந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளும், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் காத்திருந்தனர்.

#TamilSchoolmychoice

திமுக மகளிர் அணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கொரொனா தொற்று கண்டிருப்பதால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

எனினும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற அவர் தக்க பாதுகாப்புடன் அவசர ஊர்தியில் (ஆம்புலன்ஸ்) கொரொனா கவச உடையுடன் வந்து வாக்களித்தார்.