Home One Line P2 தமிழ் நாட்டில் 63.60 % – புதுச் சேரியில் 76.3 % – வாக்குப் பதிவு

தமிழ் நாட்டில் 63.60 % – புதுச் சேரியில் 76.3 % – வாக்குப் பதிவு

602
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் இன்று மாலை 5.00 மணி வரையில் 63.60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

இதே காலகட்டத்தில் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது 74.26 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

புதுச்சேரி மாநிலத்தில் கூடுதல் விழுக்காடு வாக்களிப்பு

இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய புதுச்சேரி மாநிலத்தில் மாலை 5.00 மணி வரையில் 76.03 விழுக்காடு வாக்குப் பதிவு நிறைவேறியிருக்கிறது.

புதுச்சேரியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, மோடியுடன் (கோப்புப் படம்)
#TamilSchoolmychoice

அதே நேரத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டில் 84.11 விழுக்காடு வாக்குப் பதிவை புதுச்சேரி மாநிலம் கண்டது.

இன்றிரவு 7.00 மணி வரையிலும் வாக்குப் பதிவு நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

கொரொனா தொற்று கண்டவர்களும் விரும்பினால் மாலை 6.00 மணி முதல் 7.00 மணிவரை வாக்களிக்கலாம். அதற்காக முழுக் கவச உடை அணிந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளும், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

திமுக மகளிர் அணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கொரொனா தொற்று கண்டிருப்பதால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எனினும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற அவர் தக்க பாதுகாப்புடன் வந்து வாக்களிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.