Home One Line P1 ‘என்னை தேசிய கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடக்கின்றன!’- மகாதீர்

‘என்னை தேசிய கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடக்கின்றன!’- மகாதீர்

654
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தம்மை தேசிய கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஒப்புக்கொண்டார்.

புதன்கிழமை மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், மகாதீர் தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்த சில ‘குற்றவாளிகளுடன்’ பணியாற்ற முடியாததால் இந்த முயற்சி தோல்வியுற்றதாகக் கூறினார்.

இருப்பினும், சம்பந்தப்பட்டவர் தேசிய கூட்டணிக்கு வெளியே இருந்தால் நிலைமை வேறுபட்டிருக்கலாம் என்று மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அந்நேரம் மட்டுமல்ல (ஷெராடன் மூவ்), இப்போது கூட என்னை உள்ளே இழுக்கும் முயற்சி உள்ளது. என்னால் முடியாது. நஜிப்பை (ரசாக்) நிராகரிக்கிறேன் என்று மக்களுக்கு நான் வாக்குறுதி அளித்தேன், நஜிப்புடன் என்னால் ஒத்துழைக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

நம்பிக்கை கூட்டணி வீழ்ச்சியிலிருந்து, மகாதீர் ஊழல்வாதிகளுடன் பணியாற்றுவதற்கான முயற்சிகளை எதிர்ப்பதாகக் கூறியுள்ளார். நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களை அவர் குறிப்பிடுகிறார்.