கோலாலம்பூர்: ஜூன் மாதம் ஜசெகவின் மத்திய செயற்குழு தேர்தலில் போட்டியிடுவதாக அதன் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
எவ்வாறாயினும், எந்தவொரு உயர்மட்ட தலைமை பதவியையும் அவர் இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
“மலேசியன் டிரிம், கனவை கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கொண்டிருக்கிறேன். கட்சித் தேர்தலில் தோற்கடிக்கப்பட நான் தயாராக இருக்கிறேன், ” என்று நேற்று இரவு ஒரு நிகழ்வில் அவர் கூறினார்.
ஜசெக எந்தவொரு இனக் கொள்கையையும் ஆதரிக்கவில்லை என்று லிம் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், வெவ்வேறு அடையாளங்களைக் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் மலேசியர்கள் என்பதை ஒப்புக்கொண்டார்.
“சீன வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்கள் சீன புலம்பெயர்ந்தோரைச் சேர்ந்தவர்கள் அல்ல, ஏனெனில் அவர்கள் சீனர்கள் மட்டுமல்ல, மலாய்க்காரர்கள், இந்தியர்கள், கடாசான்கள் மற்றும் இபான்கள் ஆகியோரையும் உள்ளடக்கிய மலேசிய புலம்பெயர்ந்தோரின் ஒரு பகுதியாக உள்ளனர் ” என்றார்.
“மலேசிய சீனர்கள், பிற மலேசியர்களைப் போலவே அவர்களின் இனம், மதம், மொழி, கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் முதல் தர மலேசிய குடிமக்களாக கருதப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மலேசிய கனவை நனவாக்குவதற்கான ஒரே வழி இதுதான், ” என்று அவர் மேலும் கூறினார்.