Home One Line P1 நிக்கி கும்பலுடன் தொடர்புடைய காவல் துறையினர் விசாரிக்கப்படுகின்றனர்

நிக்கி கும்பலுடன் தொடர்புடைய காவல் துறையினர் விசாரிக்கப்படுகின்றனர்

716
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நிக்கி லியோ சூ ஹீ உடன் தொடர்புடைய தங்கள் அதிகாரிகளின் பெயர்களை ஜோகூர் காவல்துறை ஒப்படைக்காது என்றும், அதற்கு பதிலாக அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜோகூர் காவல் துறைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

“ஒழுங்கு நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் இன்னும் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். அது முடிந்ததும், நாங்கள் கைது செய்வோம். என்னைப் பொறுத்தவரை இது மிகவும் துல்லியமாக, எளிதாக செயல்படுத்தப்படுவதாகும்,” என்று அவர் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

தண்டனைச் சட்டம் (சட்டம் 574) இன் பிரிவு 130 வி (1) சட்டத்தின் கீழ், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் குறைந்தது ஐந்து ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

நிக்கியுடன் 34 – க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும், அதனை விசாரிக்க காவல் துறைக்கு அதிக நேரம் கொடுக்குமாறு அயோப் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

கடந்த மாதம், காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் 34 காவல் துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்க அதிகாரிகள் நிக்கியுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தினார்.