Home Photo News “தையா? சித்திரையா? …அனைத்துத் தரப்புகளுக்கும் பொதுவானவாக இருப்பேன்” – சரவணன் உறுதி

“தையா? சித்திரையா? …அனைத்துத் தரப்புகளுக்கும் பொதுவானவாக இருப்பேன்” – சரவணன் உறுதி

747
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 14) தலைநகர் பிரிக்பீல்ட்சில் மலேசிய இந்து சங்கமும், மற்ற இந்து அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டு பொதுவிழாவில் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

“நான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வேனா என உங்களில் பலர் ஐயம் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், இந்த இடத்தில் நான் ஒன்றை உறுதியுடன் கூற  விரும்புகிறேன். நான் ஒரு தரப்புக்கும் மட்டும் தலைவரோ, அமைச்சரோ அல்ல! நான் நமது சமூகத்தின் அனைத்துத் தரப்புக்கும் பொதுவானவனாக இருப்பேன். அந்த வகையில் தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைப் புத்தாண்டு என்ற போராட்டம் நீண்ட காலமாக நீடித்து வருகின்றது. ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். ஆனால் அதை மற்றவர்மேல் வலிந்து திணிக்கக் கூடாது. சித்திரையா, தையா என்ற சர்ச்சை கடைசித் தமிழன் இருக்கும் வரை இருந்து வரும்” என இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய சரவணன் கூறினார்.

“தனிமனித கொள்கையினால் ஒரு சமுதாயம் பிளவு படக்கூடாது என்பதே எனது எண்ணம், எதிர்பார்ப்பு,  வேண்டுகோள் எல்லாம். இந்த நாட்டின் 3-ஆவது பெரும்பான்மையான நாம் இம்மாதிரியான விஷயங்களால் பிரிந்திருத்தல் கூடாது.
அறிவுசார்ந்து, அறிவியல் சார்ந்து சரியானது எது என்பதைக் கலந்து பேசிக் கண்டறிய வேண்டும்” என்றும் சரவணன் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: