Home One Line P1 மலாய்க்காரர்கள் ஆட்சியாளர்கள் மீது கோபமாக உள்ளனர்!

மலாய்க்காரர்கள் ஆட்சியாளர்கள் மீது கோபமாக உள்ளனர்!

744
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான மலாய்க்காரர்கள் இப்போது தங்கள் ஆட்சியாளர்கள் மீது கோபப்படத் தொடங்கியுள்ளதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

இன்று இஸ்தானா நெகாராவுக்கு வெளியே ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர், பல மலாய்க்காரர்கள் தங்கள் ஆட்சியாளர்களை விமர்சிக்க முன்வருவதாகவும், ஏனெனில் அவர்கள் அவசரகால நிலை காரணமாக “துன்பப்படுவதாகவும் கூறினார்.

“மலாய்க்காரர்கள் (தங்கள் சொந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக செல்வது) அசாதாரணமானது, ஆனால், இப்போது அவ்வாறு செய்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தேசிய கூட்டணி நிர்வாகம் மலாய்க்காரர்கள் எப்படி உணர்கிறார்ர்கள் என்பது குறித்து மாமன்னருக்கு அறிவிக்கவில்லை என்றும் மகாதீர் கூறினார்.

அவசர கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் தனது அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும், அது மாமன்னரின் அறிவுறுத்தலின் பேரில் நடப்பதாகத் தோன்றுவதாக அவர் கூறினார்.

“அனைத்து நடவடிக்கைகளும் (கட்டளைச் சட்டத்தின் கீழ்) அரசாங்கத்தால் அல்லது மொகிதின் யாசினால் எடுக்கப்படுகின்றன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், இதில் மாமன்னர் பெயர் சம்பந்தப்படுகிறது. இது குறித்த எந்தவொரு விமர்சனமும் தேசத்துரோகமாக கருதப்படும், ” என்று மகாதீர் கூறினார்.