Home வணிகம்/தொழில் நுட்பம் வெஸ்ட்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் 10.5 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டது

வெஸ்ட்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் 10.5 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டது

612
0
SHARE
Ad

கிள்ளான் : ஆண்டுதோறும் தனது கொள்கலன்களைக் கையாளும் ஆளுமையை விரிவுபடுத்தி வரும் வெஸ்ட்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் பெர்ஹாட் நிறுவனம் 10.5 மில்லியன் எண்ணிக்கையிலான 20 அடி நீளம் கொண்ட கொள்கலன்களை கடந்த ஆண்டு கையாண்டது.

வெஸ்ட்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் வரலாற்றில் இதுவரையில் இது இரண்டாவது மிக உயர்ந்த எண்ணிக்கையிலான சாதனையாகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3 விழுக்காடு மட்டுமே குறைவானதாகும்.

கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மிக மோசமான கொவிட்-19 பாதிப்புகள் உலக வணிகங்களைப் பாதித்திருக்கும் நிலையிலும் வெஸ்ட்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் தனது கொள்கலன்களைக் கையாளும் திறன்களை விரிவாக்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

மலேசியப் பங்குச் சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றின் மூலம் வெஸ்ட்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் இந்தத் தகவல்களை வெளியிட்டது. மலேசியாவிலேயே ஓர் ஆண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான கொள்கலன்களைக் கையாளும் முதல் துறைமுகமாக வெஸ்ட்போர்ட்ஸ் உருவெடுத்தது.

இப்போதும் 10 மில்லியனுக்கும் அதிகமான கொள்கலன்களைக் கையாளும் நாட்டின் ஒரே துறைமுகமாக வெஸ்ட்போர்ட்ஸ் திகழ்கிறது.

வெஸ்ட்போர்ட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கும் டான்ஸ்ரீ ஞானலிங்கம் மலேசியாவின் பெரும் பணக்காரர்களின் வரிசையில் தொடர்ந்து இடம் பெற்றிருக்கிறார்.

அண்மையில் மலேசியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ் நிதி நிறுவனம் ஞானலிங்கத்தின் சொத்து மதிப்பு 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிட்டது.

வெஸ்ட்போர்ட்ஸ் குழுமத்தின் நிருவாக இயக்குநராக டத்தோ ரூபன் எமிர் ஞானலிங்கம் அப்துல்லா செயல்படுகிறார். இவர் டான்ஸ்ரீ ஞானலிங்கத்தின் மகனாவார்.