Home நாடு தாபோங் ஹாஜி புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அம்ரின் அவாலுடின் நியமனம்

தாபோங் ஹாஜி புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அம்ரின் அவாலுடின் நியமனம்

496
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மே 6 முதல் லெம்பாகா தாபோங் ஹாஜியின் புதிய குழு நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் டத்தோஸ்ரீ அம்ரின் அவாலுடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் டத்தோ நிக் முகமட் ஹஸ்யுடின் யூசோப்பிடமிருந்து பொறுப்பைப் பெறுவார். நிக் முகமட் ஹஸ்யுடின் வாரிய உறுப்பினர், குழு நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவார்.

இன்று தாபோங் ஹாஜி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) டத்தோ டாக்டர் சுல்கிப்லி முகமட் அல் பக்ரி, அம்ரினை இந்த பதவிக்கு நியமிக்க ஒப்புக்கொண்டார்.

#TamilSchoolmychoice

அம்ரின், பெருநிறுவன துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர்.

ரெனோங் பெர்ஹாட், மலேசியன் ரிசோர்சர்ஸ் கார்ப்பரேஷன் பெர்ஹாட் மற்றும் புட்டேரா கேபிடல் பெர்ஹாட் போன்ற நிறுவனங்களில் பல முக்கிய பதவிகளை வகிப்பதற்கு முன்பு அவர் வங்கியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

தாபோங் ஹாஜி தலைவர் டான்ஸ்ரீ முகம்ட் நோர் யூசோப், அம்ரினின் பரந்த திறன்களும் அனுபவமும் தாபோங் ஹாஜியை மிகச் சிறந்த மற்றும் பெருமைமிக்க நிலைக்கு கொண்டு வர முடியும் என்று நம்புவதாகக் கூறினார்.