Home நாடு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும்

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும்

538
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இப்போது தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும். இது தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தில் பயன்படுத்தப்படாது.

தடுப்பூசியை நிர்வகிக்க சிறப்பு தடுப்பூசி மையம் அமைக்கப்படும் என்றும், தற்போது, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும் என்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளில் பெறுநர்களிடையே த்ரோம்போசிஸ் ஏற்பட்டதைத் தொடர்ந்து தடுப்பூசி திட்டத்தின் 2 ஆம் கட்டத்தில் இந்த தடுப்பூசி பயன்படுத்துவது குறித்த கேள்விகளை அடுத்து இந்த முடிவு வந்துள்ளது.