கோலாலம்பூர்: இந்தியாவில் இருந்து நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு பாரபட்சமான அல்லது இனவெறி சார்ந்தது அல்ல என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
மாறாக, அங்கு ஏற்படுள்ள புதிய கொவிட் -19 தொற்று பரவலை மலேசியாவிற்கு பரவாமல் கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
“இந்தியாவில் இருந்து வருபவர்களை அனுமதிக்கவில்லை. இது இனவெறி அல்லது பாகுபாடு அல்ல. இது அங்கிருந்து கொண்டுவரப்படும் தொற்றைக் கட்டுப்படுத்தவே என்பதை உறுதி செய்வதற்காகவே.
“எனவே நாங்கள் அவர்களை மலேசிய எல்லைக்குள் அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் தெரிவித்தார்.