Home நாடு மின்னல் வானொலி : இரவு 9 மணி செய்திகள் ஏன் இடம் பெறவில்லை?

மின்னல் வானொலி : இரவு 9 மணி செய்திகள் ஏன் இடம் பெறவில்லை?

935
0
SHARE
Ad

கோலாலம்பூர் : வழக்கமாக மின்னல் பண்பலை வானொலியின் அலைவரிசையில் இடம் பெறும் தமிழ் செய்திகள் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) இரவு 9.00 மணிக்கு ஒலியேறவில்லை. இதுகுறித்து பல செல்லியல் வாசகர்கள் நம்முடன் தொடர்பு கொண்டு இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டனர்.

வானொலியில் சில நிகழ்ச்சிகள் ஏதோ சில காரணங்களாலோ, அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளாலோ இடம் பெறாமல் போவது வழக்கமான ஒன்றுதான். எனினும் தினமும் இரவு 9.00 மணிக்கு தவறாமல் இடம் பெற்று வந்த தமிழ் செய்திகள் இன்று திடீரென ஒலிபரப்பப்படாமல் தவிர்க்கப்பட்டதற்கான காரணத்தையும் மின்னல் வானொலி எவ்வித அறிவிப்பையும் செய்யவில்லை என வானொலி நேயர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

தவறாமல் ஒவ்வொரு நாளும் இயன்றவரை இரவு 9.00 மணி செய்திகளைத் தான் கேட்டு வருவதாகவும், இன்று மட்டும் அந்தச் செய்திகள் ஒலிபரப்பப்படாமல் தவிர்க்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை என்றும் அந்த நேயர் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மின்னல் வானொலி இரவு 9.00 மணி செய்திகள் தவிர்க்கப்பட்டதற்கான காரணத்தை அறிவிப்பாளர்கள் விளக்கியிருக்க வேண்டும் என்றும் அந்த நேயர் கோரிக்கை விடுத்தார்.

நாளையும் இரவு 9.00 மணிக்கு மின்னல் வானொலியில் தமிழ் செய்திகள் இடம் பெறுமா? என்பது குறித்தும் வானொலி நிருவாகம் தனது இலட்சக்கணக்கான நேயர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த நேயர் செல்லியல் வாயிலாகக் கேட்டுக் கொண்டார்.