கோலாலம்பூர்: காவல் துறை தடுப்புக் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கணபதியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இனம் காரணமாக யாரும் இவ்வாறு ஒடுக்கப்படக்கூடாது என்று அன்வார் கூறினார்.
“நாட்டில், உதாரணமாக ஓர் இனம், தடுப்புக் காவலில் தாக்கப்படுகிறார்கள்,” என்று அன்வர் நேற்று இரவு கூறினார்.
கணபதியின் திடீர் மரணம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அன்வார் அவ்வாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், இதுபோன்ற சம்பவங்கள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன என்றார்.
“சிலர் அதிர்ச்சியடைந்தனர். இது அரிதானது போல. என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும். 1998- ஆம் ஆண்டில் நான் அதை அனுபவித்தேன் (தாக்கப்பட்டேன்) நான் விடுவிக்கப்பட்டபோது அவர்களிடம் சொன்னேன், மலாய்க்காரர், சீனர், இந்தியர், சபா அல்லது சரவாக்கியர் என யாராக இருந்தாலும், வேறு யாரையும் ஒடுக்கப்படுவதை நான் விரும்பவில்லை ,” என்று அவர் கூறினார்.