Home இந்தியா தமிழ்நாடு : டிராபிக் இராமசாமி காலமானார்

தமிழ்நாடு : டிராபிக் இராமசாமி காலமானார்

718
0
SHARE
Ad

சென்னை : தமிழகம் முழுவதும் தனது போராட்டங்களால் பிரபலமடைந்த டிராபிக் இராமசாமி உடல்நலக் குறைவால் சென்னை இராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று செவ்வாய்க்கிழமை (மே 4) காலமானார். அவருக்கு வயது 87.

சென்னை பாரிமுனையில் (பாரிஸ் கோர்னர்) பகுதியில் அடிக்கடி ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க இராமசாமி காவல் துறையினருக்கு உறுதுணையாக இருந்த காரணத்தால் அவருக்கு டிராபிக் இராமசாமி என்ற பெயர் காலப்போக்கில் நிலைத்து விட்டது.

தொடர்ந்து பல பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்து அதன் மூலம் பிரபலமானார் டிராபிக் இராமசாமி.

#TamilSchoolmychoice

எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் அந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பைக் காட்டிப் போராடியவர் இராமசாமி. அஞ்சாமல் அவர் பல விவகாரங்களுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்.

அவரது குணநலன்கள் கொண்ட கதாபாத்திரங்கள் பல படங்களில் பிரதிபலிக்கப்பட்டன. ஜோக்கர் படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரம் அவரை ஒத்திருந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

அதே போல, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் “டிராபிக் இராமசாமி” என்ற பெயரிலேயே ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் கதை டிராபிக் இராமசாமியின் வாழ்க்கையை ஒத்திருந்தது.