Home நாடு பொதுத் தேர்தல் 2023-இல் நடத்தப்பட வேண்டும்!

பொதுத் தேர்தல் 2023-இல் நடத்தப்பட வேண்டும்!

414
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தற்போதைய நாடாளுமன்ற தவணை 2023- இல் முடிவடைந்த பின்னர் பொதுத் தேர்தலை நடத்த பரிந்துரைத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய கொவிட்-19 தொற்றுநோயை கணக்கில் எடுத்துக்கொண்ட அவர், தேர்தல் நடந்தால் மற்றொரு கொவிட் -19 அலை ஏற்படும் என்று எச்சரித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த சபா மாநில தேர்தல்களுக்குப் பின்னர் கொவிட் -19 தொற்று குறித்து அனைத்து தரப்பினருக்கும் அவர் நினைவூட்டினார். இது சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

“கொவிட் -19 நிலைமைக்கு மத்தியில் தேர்தலை நடத்த விரும்பினால், நாம் முதலில் பாதிப்பின் அளவை வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும். அதனால்தான் அவசரநிலை உத்தரவு நீக்கப்பட்ட பின்னரும், தேர்தல் நடத்த முடியாது. 2023 வரை நாம் காத்திருக்க வேண்டும்,” என்று அவர் உத்துசான் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

உலகில் இப்போது குறிப்பிடத்தக்க பல கொவிட் -19 பிறழ்வுகள் இருப்பதால் நாடு கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.