Home நாடு மலேசிய ஆயுதப்படை வீரர்கள் சங்கம் பொதுத் தேர்தலில் போட்டியிடும்

மலேசிய ஆயுதப்படை வீரர்கள் சங்கம் பொதுத் தேர்தலில் போட்டியிடும்

434
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய ஆயுதப்படை வீரர்கள் சங்கம் (வெதெரென்) அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதன் தலைவர் கேப்டன் ஷாருடின் உமர் கூறுகையில், இதுவரை எழுப்பப்பட்ட பிரச்சனைகளையும், மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசாங்கத்தின் பலவீனத்தையும் அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வெதெரென் கண்டறிந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

“பல மாநிலங்களில் நாடாளுமன்ற இடங்களுக்கு குறைந்தது 50 வேட்பாளர்களை வெதெரென் நிறுத்தும்.

#TamilSchoolmychoice

” பார்டி கெமாக்முரான் நெகாரா என்று அழைக்கப்படும் கட்சியை நிறுவுவதற்காக வெதெரென் சங்கப் பதிவாளருக்கு ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. இது இன்னும் சங்கப் பதிவாளரின் பரிசீலனையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

சங்கப் பதிவாளருக்கு விண்ணப்பம் இரண்டு மாதங்களுக்கு முன்பு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். எனவே தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சியாக கெமாக்முரானின் விண்ணப்பத்தை அங்கீகரிக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

ஆயினும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை.